திடீர் சுகவீனமடைந்த 38 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Colombo (News 1st) பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றின் 38 மாணவர்கள்
திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமடைந்தமையே இதற்கு காரணம் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles