யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne, சிங்கப்பூர், மலேசியா Kuala Lumpur, இந்தியா சென்னை, வவுனியா நைனாமடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராகவன் சண்முகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எத்தனை நாட்கள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா…
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா…
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா…
உங்கள் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களின் அன்பிற்குரிய தந்தையின் 31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியேட்டிக் கிரியையும் 27-06-2026 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை சரஸ்வதி மண்டபம், லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி எனும் முகவரியில் நடைபெறும் அந்நிகழ்வில் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய உணவு நிகழ்விலும் கலந்து கொண்டு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
