டுபாயில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல்!

டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

20 நிமிட இடைவேளையில் 7 முறை வெடிச்சத்தம் கேட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வெடிச்சம்பவம் குறித்தோ, இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியோ அதிகாரிகள் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி அமைப்பினருக்கும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில் டுபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தான் இதற்கு காரணம் என்று ஈராக் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல, ஏமனின் தலைநகரான சனாவிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை இந்த தாக்குதலில் , துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை நாசாவின் போட்டோக்கள் காட்டுவதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles