Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(19) பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தநிலையில், 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here