Colombo (News 1st) கிங், நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

எனவே குறித்த கங்கைகளை சுற்றி தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டின் சில மாகாணங்களில் இன்று(24) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பதுளை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here