Colombo (News 1st) மின்னேரியா – பட்டுஓய பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

இன்று(24) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் 6000 காட்டு யானைகள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here