அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்

பிறப்பு13 SEP 1958, இறப்பு30 OCT 2020

வயது 62

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) பாண்டியன்குளம், Sri Lanka Toronto, Canada

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பரராஜசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அகிலம் விட்டு அங்கு சென்று
ஆண்டு மூன்று தான் ஆகிவிட்டது ஐயா !
ஆறாத்துயரின் அழுத்ததால் அல்லும் பகலும்
அழுகின்றோம் அகிலத்தில் நாமிங்கு!

எம் அன்புத் துணையே ! எம்மவரின் ஆருயிரே !
அன்பு அப்பா உன்  அழகுமுகம் பார்க்க
அவதரித்த உம் ஆலம் விழுதுகள்
விம்மி விழுந்து வீரிட்டுக் கிடக்குதையா!
மண்ணில் உன் மதிமுகம் காட்டையா!

எம் பண்பின் பகலவனே
பதைபதைத்து பதறுகின்றோம் நாமிங்கு
உம் பால்வடியும் முகம் காண
துடிக்கின்றோம் இப்போ
தோத்திரத்தால் தொழுது விழுகின்றோம்
தோன்றி ஒருமுறை உன் தூயமுகம் காட்டையா !!!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles