தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமனம்

Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகார சபையின் பணிப்பாளர் சபை இன்று(31) கூடிய போதே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையை கூட்டுவதற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன நடவடிக்கை எடுத்திருந்தார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், தரமற்ற மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் தரவுகளை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மீது அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டன.

சுகாதாரத் துறையில் இவ்வாறானதொரு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதிய சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவை நியமித்தார்.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles