தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு உறுப்பினர் நியமனம்

தேர்தல் சட்டத்திருத்தம், ஊடக பயன்பாடு, அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எலன் கார்மைல் வியர் டேவிட், ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலில், ஆணைக்குழுவின் துறைசார் விவகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் செயற்படுகின்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles