காஸா எல்லையில் இருந்து எகிப்தின் ரஃபா எல்லையை அண்மித்துள்ள 13 இலங்கையர்கள்

காஸா எல்லையில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 13 பேர் எகிப்தின் ரஃபா எல்லையை அண்மித்துள்ளனர்.

அவர்களை சந்திப்பதற்காக இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக பாலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் இக்குழுவினர் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது காஸாவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 இலங்கையர்கள் காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles