பாராளுமன்ற தராதரங்கள் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பிரித்தானிய பாராளுமன்ற மரபிற்கமைய தயாரிக்கப்பட்ட பாராளுமன்ற தராதரங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளை உள்ளடக்கி இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல தரப்பினருடன் கலந்தாலோசித்து இலங்கைக்கு ஏற்ற வகையில் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles