புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன

Colombo (News 1st) புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிபர் சேவையின் 03 ஆம் தரத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், கொழும்பு D.S.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவர்கள், மாகாண சபைகள் ஊடாக அதிபர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles