காஸாவில் சிறைப்பட்டிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

2 குடும்பங்களைச் சேர்ந்த 2 பெண்களும் 09 குழந்தைகளும் நாடுதிரும்பியவர்களில் உள்ளடங்குவதாக  பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக பிரதானி பேர்னாட் குரே தெரிவித்தார்.

இதேவேளை, காஸா வட பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் மேலும் 4 இலங்கையர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 06 இலங்கையர்கள் பலஸ்தீனத்திற்குட்பட்ட பகுதியில் தங்கியுள்ளதாகவும் பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக பிரதானி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles