பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய்களில் Aflatoxin; திருப்பி அனுப்ப நடவடிக்கை

Colombo (News 1st) பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய்களில் Aflatoxin கலந்திருந்தமையினால், அவற்றை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

25 மிளகாய் கொள்கலன்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இலங்கையை சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க, சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவு தொடர்பான பிரச்சினைகளை 0112112718 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles