இருவேறு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

Colombo (News 1st) பண்டாரவளை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் வத்தளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(15) கொள்கலன் வாகனமொன்று பாதசாரி மீது மோதிய விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் விசாரணைகளை முனனெடுத்துள்ளனர்.

இதேவேளை, பண்டாரவளை – பூனாகலை பிரதான வீதியின் துல்கொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட போது, மற்றுமொரு பஸ் மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மக்குல் – எல்ல பகுதியை சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles