சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள்

Legislature chamber with officials standing around a central podium as a man in a tan suit speaks at the front of the room.

17ஆவது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று திங்கட்கிழமை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில் முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​.எல்.​ஏ ஆக பதவி​யேற்க தொடங்கினர்.

தமிழக முதல்வராக த.வெ.க. தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்​றார். இதனையடுத்து தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி த.வெ.க. உறுப்​பினர் எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேரவைச் செயலர் கி.சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார்.

ஆளுநர் மாளி​கை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக கருப்பையா​வுக்கு ஆளுநர் அர்​லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். இந்​நிகழ்​வில், முதல்​வர் ஜோசப் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

இந்த நிலையில், 17ஆவது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதாக த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்​டப்​பேர​வைக்கு வருகை தந்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.

முதல்வர் விஜய் பதவியேற்பின்போது வந்தமை போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு சட்​டப்​பேரவை​யின் முதல் கூட்​டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது.

சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles