செம்மணியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக் கூடு அடையாளம்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை , 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் மூன்று எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles