அமெரிக்க படை தடுத்த கப்பல் இலங்கைக்கு அண்மையாக?

அமெரிக்க படையால் தடுக்கப்பட்ட எண்ணெய் கப்பல் ஏப்ரல் 21ஆம் திகதியான இன்றைய தினம் அதிகாலை திடீரென திசையை மாற்றியுள்ளது. இந்தக் கப்பல் தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக சுமார் 700 கிலோமீற்றர் தொலைவில் தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடல் போக்குவரத்து தரவின்படி, 3 இலட்சம் தொன் எண்ணெயுடன் இந்தக் கப்பல் தற்போது பயணிக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்தக் கப்பல் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு பணிமனை மூலமாக தடை செய்யப்பட்டது. ஈரானுடன் தொடர்புடைய இந்தக் கப்பல் இந்திய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் உள்ளது.

ரிபானி கப்பல் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வளைகுடா பகுதியிலிருந்து புறப்பட்டு கடந்த 18ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகம் அருகே குறுகிய நேரம் தரித்தது.

இதன் பின்னர், அமெரிக்க படையினரால் தடுக்கப்பட்டது. இந்தக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரை அடையும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles