சுவீடன் அடுத்த மாதம் முதல் ‘கிரிபென்’ (Gripen) ரக போர் விமானங்களை போலந்துக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
நேட்டோ (NATO) வான்வெளி கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்புக்கு வலுசேர்ப்பதுடன், உக்ரைனுக்கு இராணுவ மற்றும் சிவில் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் போலந்தில் உள்ள தளவாட மையத்தை பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 இல் நேட்டோவில் இணைந்த சுவீடன், 2025ஆம் ஆண்டிலும் இப்பணிக்குத் தனது போர் விமானங்களை வழங்கியுள்ளது.
ஸ்வீடிஷ் பாதுகாப்பு நிறுவனமான ‘சாப்’ (Saab) தயாரித்த இந்த போர் விமானங்கள், இப்பணியில் பங்களிக்கும் அதே வேளையில், முக்கியமாக சுவீடனிலிருந்தே இயக்கப்படும் என்று அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
