பிரிட்டன் கடற்படையின் மெர்லின் எம்.கே.4 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.
இங்கிலாந்தின் தென்மேற்கpல் சோர்டன் பகுதியில் பயிற்சி நடவடிக்கையின்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தத் தகவலை கடற்படை தலைமை தளபதி ஜெனரல் கெய்ன் ஜென்கின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்ரார்மர் இந்த உயிரிழப்புகள் ‘மிகவும் துயரமானவை’ எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் அதிகாரபூர்வ விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
