Sangathy
News

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை மட்டுப்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு

Colombo (News 1st) உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை, உண்மையை கண்டறியும் உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை நடாத்திச்செல்லும் இவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிக்னீஸ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே கொழும்பு பேராயர் இதனை கூறினார். 

நாட்டிற்கு சிந்தனைப் புரட்சி தேவைப்படுவதாகவும் அனைத்து இன, மத மக்களையும் சமத்துவத்துடன் நடத்தும் சட்டப் புரட்சியும் நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பௌதீக வளங்களை பாதுகாத்து சர்வதேசத்தின் பக்கத்திலிருந்து அனைவரும் பயனடையக்கூடிய தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்காக நாட்டை இதுவரை ஆட்சி செய்த பாரம்பரிய அரசியல் கட்சிகளை நிராகரிக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனும் போர்வையில் மக்கள் கருத்து வெளியிடுதல், உண்மையை கண்டறியும் உரிமைகள் மட்டுப்படுத்தப்படுவதாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளமை தௌிவாகின்றது என அவர் குறிப்பிட்டார். 

நாட்டை சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டியது அரசியல், மக்கள் சார்பான ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Chinese and Lankan FMs meet on sidelines of UNGA session

Lincoln

PM urged not to put off LG polls

Lincoln

தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களிடம் சிவில் சமூக ஒன்றியம் அறிக்கை கையளிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy