தொழில் முனைவோருக்கு 2 வீத வட்டியில் கடன் – பிரசன்ன ரணவீர

Colombo (News 1st) இரண்டு வீத கடன் வட்டி நிவாரணத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு தேவையான மூலதனத்தை வழங்குவதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 2.8 வீதமான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பணி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

2028 ஆம் ஆண்டிற்குள் தொழில் முனைவோர் எண்ணிக்கையை 10 வீதமாக உயர்த்துவதே இதன் இலக்கென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles