லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றைய தினம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
கட்டுக்கடங்காத கிடங்குத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல நாட்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தீயின் காரணமாக வெளியேறும் கரும்புகை சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் அனைவரும் மேற்படி புகையில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜூன் 17 அன்று மதியம், 46,400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள உறைந்த உணவுப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
