Thursday, February 5, 2026
Home19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் - பங்களாதேஷ் அணி சம்பியன்!

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் – பங்களாதேஷ் அணி சம்பியன்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில், Ashiqur Rahman 129 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றுக்கொடுத்ததுடன், பந்துவீச்சில், ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில், Ayman Ahamed 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.

இதையடுத்து, 283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம பெற்று போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular