மலேசியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட ஆளில்லாத போர் விமானமான டோடாக் அடுத்த மாதம் சோதிக்கப்படவுள்ளது.
சுமார் 500 கிராம் எடைகொண்ட வெடிகுண்டுகளை சுமந்தபடி 75 கிலோமீற்றர் வரை இந்த விமானம் பறக்கவல்லது. டோடாக் ஆளில்லா விமானம் முதன்முதலாக 2024ஆம் ஆண்டு கண்காட்சியில் பொதுமக்களுக்கு முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது, இந்தப் போர் விமானம் அதன், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
‘கொமிகேஸ் ட்ரோன்கள் எனப்படும் இந்த ஆளில்லாத போர் விமானங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் மூலோபாய தேவையாகும். மலேசிய ஆயுதப் படகள் தங்கள் தயார் நிலையை வலுப்படுத்த இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்த வேண்டும்’ என்று டோடாக் திட்டத்தின் தலைவர் சையத் பிரதாஸ் சையத் ரோஹானி தெரிவித்துள்ளார்.
