Sangathy
News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெனிற்றாக்கு பிணை!

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் வேளை வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டதுடன் இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

Mahanamahewa flays ‘parliamentary system’ over contempt of SC issue

Lincoln

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று தலவாக்கலையில் தடம்புரண்டுள்ளது. இன்று மாலை 04.50 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையக ரயில் மார்க்கத்திலான இரவு தபால் ரயில் இன்று தாமதமடையும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Lincoln

Opp. asks if AG, EC backing conspiracy to put off LG polls

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy