சபரிமலை யாத்திரை சென்ற யாழ் பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் சபரிமலை யாத்திரையில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்த பக்தர் ஒருவர் நேற்று (11) விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்தின் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து ,விமான ஊழியர்கள் அவருக்கு தேவையான முதலுதவி அளித்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவினர் விமான நிலையத்துக்கு வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலத்தை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் உயிரிழந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles