Wednesday, February 11, 2026
spot_img
Homeதைப்பொங்கல் தினத்தில் இந்து மத கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு

தைப்பொங்கல் தினத்தில் இந்து மத கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு

Colombo (News 1st) தைப்பொங்கல் தினத்தில் இந்து மதத்தை சேர்ந்த கைதிகளுக்கு தமது உறவினர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை (15) உறவினர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தை சேர்ந்த கைதிகளின் உறவினர்கள், தமது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொதிகள் மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒரு நபருக்கு மாத்திரம் போதுமான அளவில் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு, இவற்றை வழங்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular