Sunday, February 8, 2026
Homeசுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Colombo (News 1st) சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 07 பேர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற இமியுனோ குளோபியுலின் மருந்து கொடுக்கல், வாங்கல் தொடர்பான வழக்கு இன்று(17) மாளிகாகந்தை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Isoles Biotech மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக்க பெர்னாண்டோ, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி, வைத்தியர் விஜித் குணசேகர உள்ளிட்ட 07 பேரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular