தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்முறையாக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் இன்று (மே 15) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் கமல்ஹாசன் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்” எனக் கூறியுள்ளார்.
