கனடாவில் மோசமான குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை மருத்துவர் கைது

கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததுடன், அவற்றை அணுகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ரொறன்ரோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொராண்டோ காவல்துறையின் இணைய சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனம் ஒன்றின் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனியார் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணியிட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், ரொறன்ரோவைச் சேர்ந்த 44 வயதான டிலான் திஸநாயக்க என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்தமை, அவற்றை அணுகி பயன்படுத்தியது, ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles