Sangathy
News

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

Colombo (News 1st) மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளபட்ட ரோந்து நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 04 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த  22 மற்றும் 48 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

Govt. resorting to uncivilised measures to delay polls – JVP

Lincoln

British Scandal of the dispatch of asylum seekers to Rwanda

Lincoln

Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy