சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு மார்ச் மாதம் இடம்பெறும் – ஷெஹான் சேமசிங்க

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து  மூன்றாம் தவணையை விடுவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

VAT அறவிடப்படும் வர்த்தகர்களிடமிருந்து கட்டாயமாக அவர்களின் வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிலர் அரசாங்கத்திற்கு வரி செலுத்தாது, அதிகரிக்கப்பட்டுள்ள வரியை தமது இலாபமாக வைத்துக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles