Friday, February 6, 2026
Homeசமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவிற்கு விளக்கமறியல்

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவிற்கு விளக்கமறியல்

Colombo (News 1st) சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல நாளை (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையிலான காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பியத் நிகேஷலவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular