கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவை என வைத்தியர்கள் பரிந்துரை

Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவை என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் (Human Immunoglobulin) தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம அண்மையில் உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles