போதைப்பொருள் கடத்தல்: குவைத்தில் இலங்கையர் மூவர் கைது!

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான முற்றுகையின்போது இலங்கையர் மூவர் உட்பட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர் மூவர், குவைத் நாட்டவர் ஒருவர், இந்தியர் ஒருவர் மற்றும் குடியுரிமையற்ற இருவர் அடங்குவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் விசாரணைக்கு உதவும் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

குவைத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒழிக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles