Tuesday, February 10, 2026
spot_img
Homeகல்கி படத்தில் கமல் வரும் காட்சிகள்..இவ்ளோ தானா..? : இதற்கா இத்தனை கோடி சம்பளம்..?

கல்கி படத்தில் கமல் வரும் காட்சிகள்..இவ்ளோ தானா..? : இதற்கா இத்தனை கோடி சம்பளம்..?

கமல்ஹாசன் பிரபாஸுடன் இணைந்து கல்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் மற்றும் அவரின் சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு மீண்டும் டாப் கியரில் சென்றுகொண்டு இருக்கின்றார். இடையில் நான்கு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கமல் விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். அந்த வகையில் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்.

மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் ஜூன் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் தக்லைப் படப்பிடிப்பில் இணையவுள்ளார் கமல். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர். மேலும் தெனாலி படத்திற்கு பிறகு 24 வருடங்கள் கழித்து மீண்டும் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைகிறார் கமல். இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கமல்ஹாசன் கல்கி என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து கமலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதிலும் கமல் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வந்தன.

இதனால் ரசிகர்கள் குஷியானார்கள்.ஆனால் தற்போது வந்த தகவல் அவர்களை அப்சட்டாக்கியுள்ளது. அதாவது கல்கி திரைப்படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளாராம். அதுவும் வெறும் 15 நிமிடங்கள் தான் கமல் கல்கி படத்தில் தோன்றுவாராம். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள், அப்போ கமல் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கவில்லையா ? 15 நிமிடங்கள் நடிக்கவா இத்தனை கோடி சம்பளம் என கேட்டு வருகின்றனர்.

கமல் இப்படத்தில் நடிப்பதற்காக பல கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வந்தன. எனவே தான் வெறும் 15 நிமிடங்கள் நடிக்க எதற்கு இவ்ளோ பெரிய சம்பளம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இருப்பினும் கல்கி படம் பல பாகங்களாக உருவாக இருப்பதாகவும் முதல் பாகத்தில் தான் கமல் 15 நிமிடங்கள் வருவார், அடுத்தடுத்த பாகங்களில் கமல் தான் வில்லனாக நடிப்பார் என்றும் ஒரு தகவல் வருகின்றது.

இந்த இரண்டு தகவல்களில் எந்த தகவல் உண்மை என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் எத்தனை நிமிடமாக இருந்தாலும் சரி, கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தால் போதும் என்பதே பொதுவான ரசிகர்களின் விருப்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular