உண்மையான கேங்ஸ்டர் பகத் பாசில் : நயன்தாரா புகழாரம்..!

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம். பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகத் பாசிலுடன் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு , மன்சுர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தின் பாடலான இலுமினாட்டி பாடல் இணைய தளத்தில் வைரலாகியது. பின் பகத் பாசில் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் பகத் பாசிலின் ‘எடா மோனே’ வசனம் மிகவும் பிரபலமானது.

சமீபத்தில் திரைப்பிரபலமான சமந்தா , சைத்திரா மற்றும் பலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து நயன்தாரா இப்படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தாண்டுக்கான சிறந்த படமாக ஆவேஷம் அமையும், ஜீது மாதவனின் இயக்கம் கமர்சியல் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும், ஃபாஃபா – தி சூப்பர் ஸ்டர், வாட் எ கில்லர் பெர்ஃபாமன்ஸ், மாஸ்ஸென பகத் பாசிலின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

அதைத்தொடர்ந்து படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரையும் பாராட்டியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles