400 பெண்களின் கற்பை சூறையாடிய தேவேகவுடா பேரன் : ராகுல் குற்றச்சாட்டு..!

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அவர் 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை அவர் வீடியோ படம் எடுத்து பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.

பிரஜ்வல் ரேவண்ணா தனது பண்ணை தோட்டத்தில் பெண்களின் கற்பை சூறையாடி படம் பிடித்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 3 ஆயிரம் வீடியோ பதிவுகளில் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக்கோரி கர்நாடகா மாநில காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது பேச்சின் போது பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பயங்கர குற்றச்சாட்டுகளை கூறினார்.

ராகுல் பேசுகையில் கூறியதாவது :-

“ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார். பெண்களின் கற்பை அவர் சூறையாடி படம் பிடித்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

400-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை அவர் சூறையாடி இருக்கிறார். அவரது இந்த காம லீலைகள் பா.ஜ.க. தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். என்றாலும் அவர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள்.

அவரது கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. 400 பெண்களின் கற்பை சூறையாடி வீடியோ எடுத்த பிரஜ்வல் ரேவண்ணா பற்றி இதுவரை பிரதமர் மோடி எதுவும் பேசாமல் இருக்கிறார். அவர் மவுனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பக் கூடாது. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles