மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கப் பரிந்துரை..!

மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் ரூபா 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தைக் கருத்திற்கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இக்குழுவின் தலைவர் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பொருளாதாரச் சிரமங்களை இதன்மூலம் ஓரளவு குறைக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6,000 கோடி ரூபா எனவும் 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5,100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8,200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாக அக்குழு தெரிவிக்கின்றது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles