அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கப்போகும் அடுத்த படம் : ஹீரோ யார் தெரியுமா..!

அரண்மனை 4 படத்தை இயக்கிய சுந்தர் சி தன் அடுத்த படத்தை பற்றியும், அப்படத்தில் ஹீரோவாக நடிப்பவர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என ஆல்ரவுண்டராக வலம் வருபவர் தான் சுந்தர் சி. முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்ட சுந்தர் சி தொடர்ந்து ரஜினி, அஜித், கமல் என முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிகண்டார். அதன் பிறகு தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார் சுந்தர் சி. அப்படம் வெற்றிபெறவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

அதைத்தொடர்ந்து சில காலம் இடைவேளைக்கு பிறகு கலகலப்பு படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களம் கண்டு கம்பேக் கொடுத்தார் சுந்தர் சி. இந்நிலையில் ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் இயக்கம் என செம பிசியாக இருக்கும் சுந்தர் சி சமீபத்தில் அரண்மனை 4 என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை நோக்கி அரண்மனை 4 சென்றுகொண்டு இருக்கின்றது. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா வறட்சியான சூழலில் இருந்து வந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் மீண்டும் தமிழ் சினிமாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுந்தர் சி தன் அடுத்த படத்தை பற்றியும் பேசியுள்ளார். சுந்தர் சி அரண்மனை 4 படத்திற்கு பிறகு கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளாராம். விமல், சிவா ஆகியோரின் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து ஜீவா, ஜெய் ஆகியோரை வைத்து கலகலப்பு 2 படத்தை இயக்கினார் சுந்தர் சி.

இப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. இதையடுத்து சுந்தர் சி தற்போது மீண்டும் விமல் மற்றும் சிவாவை வைத்து கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளாராம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதிசெய்தார் சுந்தர் சி. காமெடி படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி மீண்டும் கலகலப்பு 3 என்ற காமெடி படத்தை இயக்கப்போவதாக வந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விமல் மற்றும் சிவா கலகலப்பு 3 படத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தாலும் ஹீரோயின்களை இன்னும் முடிவுசெய்யவில்லை என சுந்தர் சி கூறியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் மற்றும் பிற நடிகர்களை பற்றியும் இனிமேல் தான் முடிவெடுக்க இருப்பதாக சுந்தர் சி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles