ஷாக் கொடுத்த மனைவியின் மருத்துவமனை பில் : அடுத்த நொடி கணவன் செய்த வெறிச்செயல்..!

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மனைவியின் மருத்துவு செலவுகளை ஈடுகட்ட முடியாத விரக்தியில், இளைஞர் ஒருவர் மனைவியை கொலை செய்தார்.

மனைவியின் மருத்துவமனை பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், அவரை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ரோனி விக்ஸ். 37 வயதான இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கடந்த ஆண்டு முதல் புயல் வீச தொடங்கியது. திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற மனைவி கிறிஸ்டினாவுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அது முதலாக, கிறிஸ்டினா ஏராளமான மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். மேலும், 3 மாதங்களுக்கு ஒரு முறை டயாலிசீஸும் செய்து வருகிறார். இதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகி வந்துள்ளது. மனைவியின் மருத்துவ செலவுகளை ஒருகட்டத்துக்கு மேல் ரோனி விக்ஸால் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து, தனது நண்பர்களிடம் கடன் வாங்கி மனைவியின் மருத்துவ செலவுகளை கவனித்து வந்திருக்கிறார் ரோனி விக்ஸ்.

இந்நிலையில், கடந்த வாரம் திடீரென உடல்நலம் குன்றிய மனைவி கிறிஸ்டினாவை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரோனி விக்ஸ் அனுமதித்தார். அப்போது அவருக்கு சிறுநீரக டயாலீசிஸும் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கிறிஸ்டினாவின் சிகிச்சைக்கான பில் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய தொகை எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிச்சியடைந்த கணவன், திடீரென படுக்கையில் இருந்த தனது மனைவியின் கழுத்தை நெரிக்க தொடங்கினார். இதை அங்கிருந்த செவிலியர்கள் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால், ரோனி விக்ஸோ மூர்க்கத்தனமாக கிறிஸ்டினாவின் கழுத்தை பிடித்து இறுக்கி கொலை செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோனி விக்ஸை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் மருத்துவ செலவுகளை தன்னால் சமாளிக்க முடியாத விரக்தியில் அவரை கொலை செய்ததாக ரோனி விக்ஸ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles