25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர். இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles