எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ராகுல்..!

காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என அக்கட்சி கூறியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ‘ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 99 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சியில் அமர்வதற்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. பல எம்.பி.,க்கள் இது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles