விண்வெளி நிலையத்தில் குத்தாட்டம் போட்ட சுனிதா வில்லியம்ஸ்..!

போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி நேற்று முன் தினம் (ஜூன் 5) புறப்பட்டுச் சென்றது.

25 மணி நேர பயணத்திற்குப் பிறகு நேற்று (ஜூன் 6) (நாளை) அவர்கள் விண்வெளி நிலயத்தை சென்றடைந்தனர். சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ஆம் திகதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தனது சாகாக்களுடன் சுனிதா குதூகலமாக காற்றில் தவழ்ந்தபடி நடனமாடுவது பதிவாகியுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாகள் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரின் 3 வது பயணம் ஆகும்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் சோதனைக்கு உட்படுத்தபட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

2022-ல் சோதனை வெற்றி பெற்ற நிழையில் பாராசூட் உள்ளிட்ட சில பிரச்சனைகள் உருவாகின. இந்த நிலையில்தான் இரண்டு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில் 3-வது முயற்சியில் வெற்றிகரமாக பறந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles