Sunday, May 25, 2025
Homeவெள்ளை வேனில் வந்த கறுப்பு உடை அணிந்த சிலரால் இளைஞன் கடத்தல்..!

வெள்ளை வேனில் வந்த கறுப்பு உடை அணிந்த சிலரால் இளைஞன் கடத்தல்..!

வெள்ளை வேனில் வந்த கறுப்பு உடை அணிந்த சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை ஹீனடியங்கல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான ரொஷான் அஷான் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் வெள்ளை வேனில் வந்து இளைஞனை ஹீனடியங்கல தேவாலயத்திற்கு அருகில் வைத்து தாக்கி கடத்தியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள அவர்களை உடனடியாக கைது செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுத்துறையில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரையின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments