Saturday, September 21, 2024
Homeமூன்றாம் உலகப்போர் எப்போது தொடங்கும்? திகதி குறிச்சாச்சு.. : பகீர் கிளப்பும் நியூ நாஸ்ட்ரடாமஸ்..!

மூன்றாம் உலகப்போர் எப்போது தொடங்கும்? திகதி குறிச்சாச்சு.. : பகீர் கிளப்பும் நியூ நாஸ்ட்ரடாமஸ்..!

மூன்றாம் உலகம் போர் எப்போது தொடங்கும் என்பது குறித்து நியூ நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில் நியூ நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் இந்திய ஜோதிடர், மூன்றாம் உலகப்போர் குறித்து கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்களின் கணிப்புகள் அப்படியே நடந்து வருகின்றன. இதனால் எதிர்க்கால கணிப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பல ஜோதிடர்களின் கணிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது மூன்றாம் உலகப்போர்தான்.

2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகம் போர் தொடங்கும், வலிமைமிக்க நாடு அணுகுண்டை பிரயோகப்படுத்தும் என்ற கணிப்புகள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. இந்நிலையில் “புதிய நாஸ்ட்ரடாமஸ்” என்று அழைக்கப்படும் இந்திய ஜோதிடர் குஷால் குமார் மூன்றாம் உலகப் போரின் தொடக்கம் குறித்து கணித்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

“ஜூன் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதாவது இன்று மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக தூண்டுதலைக் கொண்டுள்ளது” என்று குஷால் குமார் தெரிவித்துள்ளார். குஷால் குமார் வேத ஜோதிடத்தை பயன்படுத்தி கணிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய பல கணிப்புகள் இதுவரை அரங்கேறியுள்ளன.

தீவிரவாத தாக்குதல்

குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத தாக்குதல்கள், வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்குள் நுழைவது, இஸ்ரேல், லெபனான், சீனா, தைவான் இடையே பதற்றம் போன்ற சம்பவங்கள் குறித்த அவரது கணிப்பு பலித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்று குஷால் குமார் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால், ஜூன் 10 ஆம் தேதி அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. இருப்பினும், தற்போது மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கு ஜூன் 18ஆம் தேதி வலுவான கிரக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்று குஷால் குமார் கணித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜூன் 29 ஆம் தேதியை மற்றொரு சாத்தியமான அழிவு நாள் என்றும் குஷால் குமார் குறிப்பிட்டுள்ளார்.

நிஜமான கணிப்புகள்

இமயமலையில் ஒன்பது இந்து யாத்ரீகர்களை குறிவைத்து கொல்லப்பட்டனர், மேலும் 33 பேர் காயமடைந்தனர் என்று குமார் சமீபத்திய பயங்கரவாத தாக்குதலை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் வடக்கிலிருந்து துருப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை ​​வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையே உள்ள இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்கப்பல்களை அனுப்பிய ரஷ்யா

மூன்றாவதாக, லெபனானில் ஹெஸ்பொல்லா படைகள் சமீபத்தில் ஒரு தளபதியின் மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் யூத அரசை சரமாரியாக தாக்கியதால் இஸ்ரேலில் மோதல்கள் அதிகரித்துள்ளன என்றும் குஷால் குமார் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கியூபா ஏவுகணை நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட போர்க்கப்பல்களை ரஷ்யா, கியூபா தலைநகர் ஹவானாவுக்கு அனுப்பியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹாட் ஸ்பாட்களில் போர் சூழல்

மேலும் சீனா தைவான் எல்லை பகுதியில் போர் பயிற்சிகளை மேற்கொள்வதையும் இதனால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல உலகெங்கிலும் உள்ள ஹாட்ஸ்பாட்களில் போர் வெடிக்கும் சூழல் உருவாகும் என்றும் குஷால் குமார் கணித்துள்ளார். போர் குறித்த குஷால் குமாரின் கணிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments