Monday, September 23, 2024
Homeவிஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்திய வெங்கட் பிரபு : என்ன விஷயம் தெரியுமா..!

விஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்திய வெங்கட் பிரபு : என்ன விஷயம் தெரியுமா..!

GOAT படம் ரிலீசாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். இதையடுத்து வெங்கட் பிரபுவால் விஜய் ஷாக்கில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது

விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படபிடிப்பெல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் மூன்றே வாரத்தில் GOAT திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. ஆனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா ? இல்லையா ? என்பது தெரியவில்லை.

அநேகமாக GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காது என்றுதான் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லியோ படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில் தற்போது GOAT படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் GOAT திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கவுள்ளது. பொதுவாக வெங்கட் பிரபு தன் படங்களுக்கு வித்யாசமான முறையில் ப்ரோமோஷன் செய்வார். எனவே GOAT படத்திற்காக அவரின் ப்ரோமோஷன் யுக்தியை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

மேலும் வெங்கட் பிரபுவின் படம் என்றாலே சற்று வித்யாசமானதாகவே இருக்கும். குறிப்பாக அவரது படங்களில் இடம்பெறும் மேக்கிங் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே GOAT படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இதுபோல GOAT படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் GOAT இயக்குனர் வெங்கட் பிரபுவை பார்த்து விஜய் அசந்துபோய்விட்டாராம். பொதுவாகவே வெங்கட் பிரபுவிற்கு நண்பர்கள் அதிகம். வெங்கட் பிரபுவின் நட்பு வட்டாரத்தை பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால் விஜய்க்கு தற்போது தான் வெங்கட் பிரபுவின் நட்பு வட்டாரத்தை பற்றி தெரிந்திருக்கின்றது போல. GOAT படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பல ஊர்களிலும் நாடுகளிலும் நடந்துள்ளது.

ஒவ்வொரு இடத்திற்கு போகும்போது குறைந்தது 20 நண்பர்கள் வெங்கட் பிரபுவை காண வருவார்களாம். அவர்களுக்காக வெங்கட் பிரபு நேரம் ஒதுக்கி செலவிடுவாராம். இதையெல்லாம் பார்த்த விஜய், உனக்கு எப்படியா இத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் ? அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் நண்பர்கள் இருக்கின்றார்கள், நீ வேற லெவல்யா என சொல்லி வியந்துபோனாராம்.

இந்நிலையில் விஜய் பொதுவாகவே படப்பிடிப்பு முடிந்து தனியே ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பாராம். ஆனால் GOAT செட்டில் விஜய் கலகலவென ஜாலியான ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பேசி அரட்டை அடித்து வருகிறாராம். அதற்கு காரணம் இது வெங்கட் பிரபுவின் படம் என்பதால் தானாம்.

வெங்கட் பிரபுவின் செட் ரொம்ப ஜாலியாக இருக்கும் என பலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளோம். எனவே தான் விஜய்யும் GOAT செட்டில் அவர்களுடன் சேர்ந்து செம ஜாலியாக இருந்து வருகின்றார் என தகவல் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments