Monday, September 23, 2024
Homeரஷியா எல்லை ஊடுருவல் பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்கே : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!

ரஷியா எல்லை ஊடுருவல் பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்கே : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை ரஷியா இந்த போரில் வெற்றி பெற முடியவில்லை. மேற்கத்திய நாடுகள் உதவிகளுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 6-ந்தேதி திடீரென உக்ரைன் வீரர்கள் திடீரென ரஷியா எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது. சுமார் 70 குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது.

எல்லையில் இருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. மற்ற நோக்கம் ஏதும் இல்லை என உக்ரைன் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்குதான் என முதன்முறையாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்

“தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷிய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் செயல்பாடு, ரஷியாவில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவது இதில் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் ரஷியா எல்லையில் ஒரு நாடு முதன்முறையாக ஊடுருவியுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஷியா, உக்ரைன் வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments