Monday, September 23, 2024
Home5 நிமிடங்களில் முழுமையான ஸ்மார்ட்போன் சார்ஜிங் : சாதித்துக் காட்டிய ரியல்மீ..!

5 நிமிடங்களில் முழுமையான ஸ்மார்ட்போன் சார்ஜிங் : சாதித்துக் காட்டிய ரியல்மீ..!

ரியல்மீ நிறுவனமானது 5 நிமிடங்களில் ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட உயர்ரக ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் 45W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையே தங்களது ஸ்மார்ட்போன்களில் கொடுத்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ 320W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்திய 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், 4,420mAh பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெறும் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது வரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் இதுதான்.

ஷாவ்மியும் 5 நிமிடங்களுக்குள் ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து காட்டியிருக்கிறது. ஆனால், அது 4000mAh திறன் கொண்ட பேட்டரி மட்டுமே.

ரியல்மீ, ஷாவ்மி, ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சி வருகின்றன. அதிலும் ஓப்போ மற்றும் ஷாவ்மி ஆகிய இரு நிறுவனங்களும் போட்டி போட்டு அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ரியல்மீயும் இணைந்திருக்கிறது.

ரியல்மீயின் 240W ஃபாஸ்ட் சார்ஜிங்:

இதற்கு முன்னர் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு ஸ்மார்ட்போனை 10 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்து காட்டியிருந்தது அந்நிறுவனம். மேலும், இந்த அதிவேக சார்ஜிங் வசதியை சீனாவில் அந்நிறுவனம் வெளியிட்ட ரியல்மீ GT 3 ஸ்மார்ட்போனிலும் கொடுத்திருந்தது.

ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 320W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி:

தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த 320W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை, அடுத்து அந்நிறுவனம் வெளியிடும் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு காஃபி குடிக்கும் நேரத்தில் நம்முடைய ஸ்மார்ட்போனை முழுவதுமாக சார்ஜ் செய்து விடலாம்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments